×

அதிமுகவுக்குள் நாட்டாமை பாஜ நிறுத்த வேண்டும் கே.சி.பழனிசாமி எச்சரிக்கை

கோவையை சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி  நேற்று அளித்த பேட்டி: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், அதிமுகவுக்கு வரலாறு காணாத வகையில் அடி விழுந்துள்ளது. அதிமுகவின் தலைமை பொறுப்புக்கு எடப்பாடி பழனிசாமி வந்த பிறகு, எல்லா தேர்தல்களிலும் அதிமுக தோல்வியை சந்தித்து வருகிறது. ஓபிஎஸ், இபிஎஸ் என இருவரும் அதிமுகவை அழித்து வருகிறார்கள். பாஜவினர் ேதவையில்லாமல் அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் மூக்கை நுழைக்கிறார்கள். குறிப்பாக, அண்ணாமலை அதிமுகவுக்குள் புகுந்து நாட்டாமை செய்கிறார். இந்த போக்கை அவர், நிறுத்திக்கொள்ள வேண்டும். இந்நிலைக்கு அதிமுகவின் தலைமை வலுவாக இல்லாததுதான் காரணம். தமிழ்நாட்டில் பாஜ வளர்ந்து வருகிறது என்பது வெறும் பொய். பாஜவை மக்கள் ஏற்கவில்லை. இவ்வாறு கே.சி.பழனிசாமி கூறினார்.

* அதிமுக வேட்பாளரின் சொந்த வார்டிலும் கடும் பின்னடைவு அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு வசித்து வரும் கருங்கல்பாளையம் பகுதி அதிமுகவின் கோட்டை என கூறி வந்த நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரசுக்கு இங்கு கூடுதலாக 5,017 வாக்குகள் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு தான் வசிக்கும் சொக்காய் தோட்டம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளில் 192 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். அங்கு காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 463 வாக்குகள் பெற்றுள்ளார்.


* தமாகாவை விட குறைந்த ஓட்டு பெற்ற அதிமுக 2021ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக திருமகன் ஈவேரா போட்டியிட்டு, 67,300 வாக்குகள் பெற்றார். அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட தமாகாவை சேர்ந்த யுவராஜ் 58,396 வாக்குகள் பெற்றார். தற்போது நடந்த இடைத்தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளரான ஈவிகேஸ்.இளங்கோவன் 1,10,556 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் 43,981 வாக்குகள் பெற்றார். அவர், கடந்த தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட தமாகா வேட்பாளரை விட 14,415 வாக்குகள் குறைவாக பெற்றுள்ளார்.



Tags : KC ,Palaniswami ,Nattam ,AIADMK , KC Palaniswami warns that Nattam should be stopped within AIADMK
× RELATED நத்தம் அருகே ஆண்கள் ஸ்பெஷல் திருவிழா 50...