திருவள்ளூர்: திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம், சோம்பட்டு மற்றும் கிளக்கோடி ஆகிய ஊராட்சிகளில் திமுக கொடி ஏற்றி தூய்மை பணியாளர்களுக்கு சீருடை, அன்னதானம், இனிப்பு மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளரும், ஒன்றிய கவுன்சிலருமான ஏ.வெற்றி என்கிற ராஜேஷ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் எஸ்.பி.ஜெ.கோகுல், தனசேகர், தனகோட்டி, எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளாரும், கும்முடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ.கோவிந்தராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திமுக கொடியேற்றி தூய்மை பணியாளர்களுக்கு சீருடை, அன்னதானம், இனிப்பு மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த விழாவில் ஈகுவார்பாளையம் தர், லட்சுமி நாரயணன், சோம்பட்டு கு.பழனி, தேவராஜ், சுந்தரம், ஞானவேல், ராஜன், சம்பத், சங்கர், மனோகரன், குணா, கருணாநிதி, சாமுவேல், சிவகுமார், சுபாஷ், முனுசாமி, மணி செட்டியார், முத்துலிங்கம், வேலு, முனுசாமி. ரவிசந்திரன், சின்னதம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
