×

தி.மலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி நிஜாமுதீனை சென்னையில் கைது செய்தது போலீஸ்..!!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி நிஜாமுதீனை சென்னையில் போலீஸ் கைது செய்தது. பிப்ரவரி 12ம் தேதி 4 ஏடிஎம் மையங்களில் ரூ.72 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். திருவண்ணாமலையில், 4 ஏ.டி.எம் மையங்களை உடைத்து 75 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில், தனிப்படைகள் அமைத்து மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இதனிடையே, சந்தேகத்தின் பேரில், அரியானாவில், ஏடிஎம் கொள்ளையில் தொடர்புடைய முகமது ஆரிஃப், ஆசாத் ஆகியோர் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கொள்ளையர்கள் 2 பேரையும் மார்ச் 3ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தனர். இதனிடையே,  ஏடிஎம் கொள்ளை வழக்கில் தலைமறைவாக இருந்த பாஷா, அப்சர் என்ற 2 வடமாநில கொள்ளையர்களை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

முக்கிய கொள்ளையர்களான ஆரிப் மற்றும் ஆஜாத் ஆகியோரை நீதிபதியின் உத்தரவின் பெயரில் கஸ்டடியில் எடுத்து விசாரணையை நடைபெற்றது. காவல் முடிந்த நிலையில், மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட் இருவரையும், மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், ஏடிஎம் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி நிஜாமுதீனை சென்னையில் போலீஸ் கைது செய்தது. இதன் மூலம் திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Tags : Nizamuddin ,T. Malai ,ATM ,Chennai , D. Malai ATM, accused Nizamuddin, arrested, police
× RELATED தி.மலை மக்களவை தொகுதிக்குட்பட்ட...