×

ஆர்.எஸ்.எஸ். பேரணி விவகாரம் தமிழக அரசின் மேல் முறையீடு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை

புதுடெல்லி:  தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு அனுமதி அளித்து உத்தரவிட்டது.  இதையடுத்து இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் 21ம் தேதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில். தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி மற்றும் ஜோசப் அரிஸ்டாட்டில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று ஒரு கோரிக்கை வைத்தனர்.

அதில், ‘‘ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்தும் விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், அதனை உடனடியாக பட்டியலிட்டு விசாரிக்க வேண்டும் என தெரிவித்தனர். இதையடுத்து தமிழக அரசின் கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த தலைமை நீதிபதி, தமிழக அரசின் மனுவை வரும் வெள்ளிக்கிழமை (நாளை)  விசாரிப்பதாக தெரிவித்தார்.



Tags : S.S. ,Supreme Court ,Tamil Nadu , RSS Tamil Nadu government's appeal on the rally issue will be heard in the Supreme Court tomorrow
× RELATED குடியரசு தின விழாவில் பங்கேற்க...