×

பிரதான குழாய்கள் இணைக்கும் பணி வியாசர்பாடி சுற்று பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்: குடிநீர் வாரியம் அறிவிப்பு

சென்னை: பிரதான குடிநீர் குழாய்கள் இணைக்கும் பணி நடைபெற உள்ளதால் வியாசர்பாடி மற்றும் அதன் சுற்று பகுதிகளில் 2ம் தேதி (நாளை) இரவு குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும், என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாளொன்றுக்கு 300 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட புழல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் எடுத்துச் செல்லும் 800 மி.மீ விட்டமுள்ள பிரதான குழாயுடன் 450 மி.மீ விட்டமுள்ள குழாயினை இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனால் வரும் 2ம் தேதி (நாளை) இரவு 10 மணி முதல் 3ம் தேதி காலை 6 மணி வரை பகுதி-4க்கு உட்பட்ட பகுதிகளான முத்தமிழ் நகர், கவியரசு கண்ணதாசன் நகர், எருக்கஞ்சேரி, சர்மா நகர், வியாசர்பாடி, கொடுங்கையூர், பி.வி.காலனி மற்றும் பகுதி-6க்கு உட்பட்ட கன்னிகாபுரம் ஆகிய பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசர தேவைக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக் கொள்ள வாரியத்தின் https://chennaimetrowater.tn.gov.in/ என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags : Vyasarbati , Water supply stoppage in Vyasarpadi area due to connection of main pipelines: Notice of Water Supply Board
× RELATED 504 கிலோ குட்கா பறிமுதல் வியாபாரி கைது