×

அதிமுகவின் கட்சி விதி திருத்தத்தை அங்கீகரிக்கக் கூடாது: தேர்தல் ஆணையத்தில் மனு

புதுடெல்லி: அதிமுக உறுப்பினரும், வழக்கறிஞருமான ராம்குமார் ஆதித்தன், தலைமை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள புதிய மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: அ.தி.மு.க கட்சி விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தி்ல் நானும் அதேப்போன்று சுரேன் பழனிசாமி ஆகிய இருவர் தரப்பில் தொடரப்பட்டுள்ள சிவில் சூட் வழக்கு விசாரணை என்பது நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகள் அனைத்தும் தகுதியின் அடிப்படையில் சட்ட விதிகளுக்குட்பட்டு சுதந்திரமாக நடைபெறலாம் என தெரிவித்துள்ளது.

அந்த வகையில், கடந்த 2022 ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு மூலம் அ.தி.மு.க கட்சி விதிகளில் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள், அதேப்போன்று கடந்த 29-04-2022ல் சமர்பிக்கப்பட்ட உட்கட்சி தேர்தல் முடிவுகள், மேலும் கடந்த 1-12-2021ல் செயற்குழு மூலம் திருத்தப்பட்ட கட்சி விதிகள், அதேப்போல் 12-09-2017ல் திருத்தப்பட்ட கட்சி சட்ட விதிகள் ஆகிய எதற்கும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகாரம் செய்யக் கூடாது. இதேப்போன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க  கட்சி தொடர்பாக நிலுவையில் உள்ள சிவில் வழக்கு விசாரணை முடியும் வரை கட்சி சின்னம்கோரும் எந்த மனுக்களையும் தேர்தல் ஆணையம் ஏற்கக்கூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : AIADMK ,Election Commission , AIADMK's party constitution should not be approved: Petition to Election Commission
× RELATED எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு திமுக கண்டனம்