×

நீர் பிடிப்பு பகுதியில் ஊராட்சி மன்ற கட்டிடம் விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம்: ஊராட்சி மன்ற கட்டிடம் நீர் பிடிப்பு பகுதியில் கட்டப்படுவதை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம், பிச்சிவாக்கம் கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் ஊராட்சி மன்ற கட்டிடம் இருந்தும், மதுராபட்டு உடையார் குப்பத்தில் நீர்ப்பிடிப்பு கால்வாய் பகுதியில், புதிய ஊராட்சி மன்ற கட்டிடத்தை கட்ட அனுமதித்த ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து, அம்பேத்கர் பெரியார் பொதுவுடமை இயக்கம், விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.

இதில், மாநில ஒருங்கிணைப்பாளர் தேவராஜ் தலைமை தாங்கினார். வழக்கறிஞர்கள் மாரிமுத்து, அரிகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிட கழகம் சார்பில் மோகன், மாவட்ட நிர்வாகி ரவிபாரதி, வழக்கறிஞர்கள் தனசேகரன், தட்சிணாமூர்த்தி, ரமேஷ், அருள், துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Panchayat Council ,Farmers Union , Panchayat Council Building Farmers Union Demonstration in Water catchment area
× RELATED அகரம், பாலவாக்கம் பகுதிகளில் பொங்கல்...