2024 தேர்தலில் பாஜவை வீழ்த்த மதவாதத்துக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்: எஸ்டிபிஐ தேசியத் தலைவர் அழைப்பு

மதுரை: எஸ்டிபிஐ கட்சியின் தலைவர்கள் சங்கமம் நிகழ்ச்சி, மதுரையில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.பைஜி தலைமை வகித்தார். மாநிலத்தலைவர் நெல்லை முபாரக் முன்னிலை வைத்தார். நிகழ்ச்சிக்குப் பின் தேசிய தலைவர் எம்.கே.பைஜி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மத்தியில் ஆளும் பாஜ அரசு, இந்திய நாட்டின் அரசியல் ஜனநாயகத்தை அழிக்கும் வேலையை செய்து வருகிறது. அதானி பிரச்னை பற்றி தற்போது வரை நாடாளுமன்றத்தில் வாய்திறக்காத நபராக பிரதமர் மோடி இருக்கிறார்.

வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜ மக்கள் விரோத சக்தியை வீழ்த்த வேண்டும். பிபிசி ஆவணப்பட விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் ஒன்று சேரவேண்டும். சிறிய கட்சி, பெரிய கட்சி என்று பாகுபாடு பார்க்காமல் மதவாதத்துக்கு எதிராக உள்ள அனைத்துக்கட்சிகளும் ஒன்றிணைந்து பாஜவை வீழ்த்த வேண்டும்’’ என்றார்.

Related Stories: