ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு 6 நாட்கள் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு 6 நாட்கள் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு, மார்ச் மாதம் 5, 6, 7 மற்றும் 10, 11, 12 ஆகிய 6 நாட்கள், ‘ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள்’, கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளிலும், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.

மார்ச் மாதம் 5,6,7 ஆகிய தேதிகளில் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள், அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல், மார்ச் மாதம் 10,11,12 ஆகிய தேதிகளில்

பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள், அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் அடங்கிய பட்டியல் விரைவில் வெளியிடப்படும். கழக சட்டமன்ற உறுப்பினர்களும், கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகளும், சார்ந்த தொகுதிகளில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவார்கள். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: