×

திருவாரூரில் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடைக்கும் நெல் மூட்டைகள்: அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் அவதி

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகளை அரசு கிடங்குக்கு எடுத்து செல்லாமல் தேக்கி வைத்திருப்பதால் புதிதாக அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்ய முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளன. திருவாரூரில் நடப்பு பருவத்தில் சுமார் 4 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு விவசாயிகள் சம்பா மற்றும் தாளடி பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். அவற்றுள் அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்களில் 60% விவசாயிகள் இயந்திரம் மூலம் அறுவடை செய்து நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்கின்றனர். ஆனால், நெல் மூட்டைகளை அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 62-க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஏற்கனவே கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை சரக்கு ரயில்கள் மூலம் அரசு கிடங்குக்கு எடுத்து செல்லாமல் அங்கேயே தேக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், தற்காலிகமாக இயங்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே நெல் மூட்டைகள் அடுக்கி வைக்க முடியும் என்பதால் புதிதாக அறுவடை செய்த நெல்மூட்டைகளை விவசாயிகள் விற்கமுடியாத நிலை காணப்படுகிறது. ஏற்கனவே பருவம் தவறி பெய்த மழையால் விவசாயிகள் பொருளாதார இழப்பை சந்தித்துள்ள சூழலில் புதிதாக அறுவடை செய்த நெல்மூட்டைகளை கொள்முதல் செய்வதற்கு தமிழ்நாடு அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Thiruvarur , Tiruvarur, purchase, paddy bundle, harvest, farmer, Avadi
× RELATED திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில்...