×

டெட் தேர்வு தற்காலிக விடைக்குறிப்பு வெளியீடு

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வின் 2ம்  தாள் தேர்வுக்கான தற்காலிக விடைக் குறிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு 2க்கான  அறிவிப்பு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 7ம் தேதி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, இம்மாதம் 3ம் தேதி முதல் 15ம் தேதி வரை கணினி வழித் தேர்வுகள் நடந்தது. தற்போது தாள் இரண்டின் தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. மேற்கண்ட தகுதித் தேர்வு தாள்-2, எழுதியோர் தாங்கள் தேர்வு எழுதிய தேதியில் எந்த அமர்வில் தேர்வு எழுதினார்களோ அந்த அமர்வுக்கு உரிய முதன்மை கேள்வித்தாள் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு எழுதியோர் அந்த தற்காலிக விடைக்குறிப்புகளின் மீது ஆட்சேபணை ஏதாவது இருந்தால் இணைய வழியில் தெரிவிக்க வேண்டும். அதற்கான வழிமுறைகளை தவறாமல் பின்பற்றி அதற்குரிய சான்று ஆவணங்களை இணைக்க வேண்டும். சான்று ஆவணங்கள் இணைக்கப்படாத முறையீடுகள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அட்சேபனை தெரிவிக்க விரும்புவோர் 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தள முகவரியில் மட்டுமே ஆதாரங்களுடன் பதிவு செய்ய வேண்டும். மேலும் பாட வல்லுநர்களின் முடிவே இறுதியானது.


Tags : TET , TET Exam Provisional Answer Key Release
× RELATED ஆசிரியர் தகுதி தேர்விற்கு தேர்ச்சி மதிப்பெண்ணை குறைக்க கோரிக்கை