×

எம்மி விருது பெற்ற ஹாலிவுட் மூத்த நடிகை மரணம்

லாஸ் ஏங்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் வசித்து வந்த ஹாலிவுட் மூத்த நடிகை பார்பரா போசன் (83), கடந்த சில வாரங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் திடீரென அவரது வீட்டில் காலமானார். இவரது மறைவுக்கு ஹாலிவுட் திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

திரைப்படம் மட்டுமின்றி அவரது ஆரம்ப கால வாழ்க்கை நாடகத் துறையில் இருந்ததால், அவர் நாடக நடிப்புகளின் மூலம் புகழ்பெற்றார். எம்மி விருது பெற்ற பார்பரா போசன், கடந்த 1970ல் பாஸ்சன் எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் ஸ்டீவன் என்பவரை மணந்தார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர். இருவரும் 1997ல் விவாகரத்து செய்தனர். அதன்பின் கடந்த 2018ல் ஸ்டீவன் போச்சோ இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Emmy-winning Hollywood veteran actress dies
× RELATED ஆப்கானிஸ்தானில் நங்கர்ஹார் மாகாணத்தில் படகு கவிழ்ந்து 20 பேர் உயிரிழப்பு