×

ஏடிபி டென்னிஸ் தரவரிசை 48 இடங்கள் முன்னேறிய சென்னை ஓபன் சாம்பியன்

துபாய்: ஏடிபி சேலஞ்சர் சென்னை ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸி. வீரர் மேக்ஸ் புர்செல், 2வது இடம் பிடித்த நிகோலஸ் தரவரிசையில் முறையே 48, 31 இடங்கள் முன்னேறியுள்ளனர். புர்செல் (24 வயது,  203வது ரேங்க்) தரவரிசையில் 48 இடங்கள் முன்னேறி 155வது இடத்தை பிடித்துள்ளார். இதற்கு முன்பு 2022 ஜூனில் 156வது இடம் பிடித்ததே அவரது அதிகபட்ச ரேங்க்காக இருந்தது. ஒற்றையர் பிரிவில் முதல் பட்டத்தை வென்றுள்ள   மேக்ஸ் இரட்டையர் பிரிவில் 2022ம் ஆண்டு விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். கூடவே 2020, 2022ம் ஆண்டுகளில் ஆஸி. ஓபனில் பைனல் வரை முன்னேறி இருக்கிறார்.

சென்னை ஓபனில்  2வது இடம் பிடித்த அமெரிக்க வீரர்  நிகோலஸ் (25 வயது, 219வது ரேங்க்) 31 இடங்கள் முன்னேறி 188வது இடத்தை பிடித்திருக்கிறார். இதற்கு முன்பு 2022 செப்டம்பரில் 201வது ரேங்க் வரை முன்னேறிய நிகோலஸ் முதல் முறையாக டாப் 200ல் இடம் பிடித்துள்ளார். இந்த தொடரில் அரையிறுதி வரை முன்னேறிய  ஆஸி. வீரர்  டேன் ஸ்வீனி 16 இடங்கள் முன்னேறி 238வது இடத்தையும், இந்திய வீரர் சுமித் நாகல் 97 இடங்கள் முன்னேறி 409வது இடத்தையும் எட்டியுள்ளனர். இதற்கு முன்பு 2022 ஜூனில் 359வது  இடம் பிடித்ததே சுமித்தின் அதிகபட்ச ரேங்க் ஆகும்.

Tags : Chennai Open ,ATP , The Chennai Open champion moved up 48 places in the ATP tennis rankings
× RELATED சில்லிபாயிண்ட்…