ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்டபாளர் ஆனந்தை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் நேற்று மாலை அக்ரஹாரம் பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: அதிமுக வேட்பாளருக்கு வயதாகிவிட்டது. எங்கள் வேட்பாளரை போல இளமையானவர் இல்லை. இங்கு அதிமுக எம்எல்ஏ-வாக இருந்த தென்னரசு எதுவும் செய்யவில்லை. எடப்பாடி பழனிசாமியை பார்த்து யாராவது நல்லவர் வருகிறார் என்று சொல்வார்களா? ஆனால், கேப்டனை பார்த்து சொல்வார்கள். எடப்பாடியை கடுமையாக எதிர்த்த பிரேமலதா, பாஜவை தாக்கி பேசுவதை தவிர்த்தார். விலைவாசி ஏறி விட்டது என தெரிவித்த பிரேமலதா, பெட்ரோல், டீசல், காஸ், உரம், நூல் ஆகியவற்றின் விலை ஏற்றம் என இதை எதையும் பேசவில்லை. அதிமுகவை மட்டும் விமர்சனம் செய்துவிட்டு பாஜவை பற்றி வாய்திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். பிரசாரத்துக்கு 2 மணி நேரம்
தாமதமாக வந்ததால், தேமுதிகவினர் கூட பார்க்க வரவில்லை.
