×

இந்திய ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கும் சாதகம் தான்: முகமது ஷமி பேட்டி

புதுடெல்லி: இந்தியா-ஆஸ்திரேலியா இடையே 2வது டெஸ்ட் டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் நேற்று தொடங்கியது. இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது. முதல் நாளான நேற்று 4 விக்கெட் கைப்பற்றிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, ஆட்டம் முடிந்த பின்னர் கூறியதாவது: இந்திய ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு மட்டுமே சாதகம் என்று சொல்வது தவறு. வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் சாதகம்தான்.

இந்த விக்கெட்டில் ஒன்றும் இல்லை என்றால் நீங்கள் ரிவர்ஸ் ஸ்விங்கை நிச்சயம் இங்கு பெற முடியும். இந்திய ஆடுகளங்களுக்கு இடையே பெரிய வேறுபாடுகள் இல்லை. இங்கு நல்ல வேகத்தில், சரியான இடங்களில் பந்துவீசினால் போதும். இந்தப் போட்டியை பொறுத்தவரையில் நாங்கள் சிறிய அளவில் முன்னிலை பெற்றால் கூட நன்றாக இருக்கும், என்றார்.

Tags : Mohammed Shami , Indian pitches are good for fast bowling: Mohammed Shami interview
× RELATED சில்லிபாயிண்ட்…