திருச்சி காவிரி பாலத்தில் 90% பணிகள் நிறைவு: இம்மாத இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வருகிறது

திருச்சி: திருச்சி மாநகரையும் ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் காவிரி கடந்த சில வருடங்களாக வலுவிழந்ததோடு, பாலம் முழுவதும் பழுதடைந்து காணப்பட்டது. மேலும் கனரக வாகனங்கள் கடந்து செல்லும் போது பாலத்தில் அதிர்வுகள் அதிகமானது. இரண்டு முறை இந்த பாலம் கடந்த அதிமுக ஆட்சியில் பல கோடி ரூபாய் செலவில் சீரமைத்தனர். ஆனால் அந்த பாலத்தின் நிலை அதன்பிறகு மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.

இந்நிலையில் தற்போதைய திமுக ஆட்சியில் அதற்கென நிதி ஒதுக்கப்பட்டு, பாலத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து ஆராய்ந்து மாநில நெடுஞ்சாலைத்துறை கடந்த செப்டம்பரில் சீரமைக்கும் பணிகளை தொடங்கியது. படிப்படியாக பாலத்தில் உள்ள பிரச்சனைகளை சரி செய்த அதிகாரிகள் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி பாலத்தின் மீது சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பாலத்தில் உள்ள அதிர்வுகளை சரி செய்வதற்காக 192 புதிய பேரிங்குகளை பொறுத்தி உள்ளனர். மேலும் பாலத்தின் ஏற்பட்டிருந்த சிறிய அளவிலான விரிசல்கள், உடைந்த பாகங்கள் உள்ளிட்டவற்றை முழுமையாக நீக்கிவிட்டு புதிதாக மாற்றியுள்ளனர்.

தற்போது பாலத்தின் மேல் பகுதியில் ஏற்கனவே உள்ள பழைய சாலைகளை முழுமையாக சுரண்டி எடுத்துவிட்டு புதிய சாலைகளை அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. இன்னும் சில தினங்களில் இந்த பணிகள் நிறைவடைந்து இந்த வாரத்தின் இறுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 5 மாத காலமாக போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகன ஒட்டிகளுக்கு இந்த காவிரி பாலம் திறந்துவிடப்படுவதை ஆர்வமுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

Related Stories: