×
Saravana Stores

ஏர்போர்ட் பகுதியில் குட்கா விற்ற பெண் கைது

 

திருச்சி, ஜூலை 22: திருச்சி ஏர்போர்ட் பகுதியில் அரசு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் அதிகாரிகள் ஏர்போர்ட் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது குளவப்பட்டி சாலை கலைஞர் நகர் பகுதியில் புவனேஸ்வரி (42) என்பவர் கடையில் அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரி சையது இப்ராஹிம் ஏர்போர்ட் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து புவனேஸ்வரியை கைது செய்து அவரிடமிருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

 

The post ஏர்போர்ட் பகுதியில் குட்கா விற்ற பெண் கைது appeared first on Dinakaran.

Tags : Gutka ,Trichy ,Trichy airport ,Dinakaran ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் 255 ஏக்கரில்...