×

கல்வி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தி வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: கல்வி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தி வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ரியல் எஸ்டேட் மற்றும் சொத்து கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கிரெடாய் அமைப்பின் சார்பில் 3 நாட்கள் நடைபெறும் ரியல் எஸ்டேட் மற்றும் சொத்து தொடர்பான கண்காட்சி தொடங்கப்பட்டது. கிரெடாய் சென்னை சார்பில் தென்னிந்தியாவின் பிரம்மாண்ட சொத்து கண்காட்சியின் 15வது பதிப்பான ஃபேர்பஃரோ 2023 தொடங்கப்பட்டது.

ரியல் எஸ்டேட் மற்றும் சொத்து கண்காட்சியை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழ்நாடு திகழ்வதாக பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழ்நாடு திகழ்வதாக இந்தியா டுடே ஆங்கில நாளிதழ் பாராட்டியுள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சி பாதை எல்லோருக்குமான வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். எல்லோருக்குமான வளர்ச்சி என்பதே தமிழக அரசின் நோக்கம். குடிசையில்லா நகரங்களை உருவாக்க குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கியவர் கலைஞர்.

தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 49 சதவீதம் மக்கள் நகர்ப்புறங்களில் வசித்து வருகின்றனர். நகரமயமாதலில் தமிழ்நாடு முன்னிலை மாநிலமாக உள்ளது. ஏழை, எளியோர் பயன்பெறும் வகையில் மலிவு விலை வீடுகளை கிரெடாய் கட்டித்தர வேண்டும். நகரங்கள் - கிராமப் புறங்களுக்கு இடையே தொடர்புகளை ஏற்படுத்தி வருகிறோம். புதிய துணைக்கோள் நகரங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் புதிய தொழில்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. அனைத்து துறைகளிலும் திராவிட மாடல் அரசு கவனம் செலுத்தி வருகிறது. எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

2030 க்குள் 1 டிரில்லியன் பொருளாதாரம் ஏற்படுத்தும் வகையில் அரசு செயல்பட்டு வருகிறது. வரும் ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் துறையில் பெரிய மாற்றங்கள் ஏற்படும். மனைப்பிரிவுகளுக்கு விரைந்து ஒப்புதல் வழங்க ஒற்றை சாளர முறை செயல்பாட்டில் உள்ளது எனவும் கூறினார்.


Tags : Tamil Nadu government ,Chief Minister ,M.K.Stal , Tamil Nadu government is focusing on all sectors including education: Chief Minister M.K.Stal's speech
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நேரடி நெல்...