×

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

 

ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூன் 8: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரத்தில், தமிழக அரசின் சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விவசாயிகளின் நன்மைக்காகவும், அவர்களின் பல்வேறு சிரமங்களை போக்கவும், தமிழக அரசு பல்வேறு இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைத்து வருகிறது. இதன்படி ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக புதிய நேரடி கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு அதற்கான அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் பகுதியில் நேற்று புதிதாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் வேளாண்மை துறை துணை இயக்குனர் தனலட்சுமி, விருதுநகர் மாவட்ட தென்னை விவசாயிகள் சங்க தலைவர் முத்தையா, மம்சாபுரம் பகுதி தென்னை விவசாயிகள் சங்க தலைவர் அப்பாஸ், செயலாளர் பாலு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் கணேசன் மற்றும் தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழக அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழக அரசின் நடவடிக்கைக்கு இப்பகுதி விவசாயிகள் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

The post ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Srivilliputhur ,Tamil Nadu government ,Mamsapuram ,
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு