திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 30 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் சுமார் 30 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் 54 ஆயிரத்து 469 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். இவர்களில் 25 ஆயிரத்து 484 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று முன்தினம் இரவு எண்ணப்பட்டது. இதில், ரூ.3.85 கோடி காணிக்கையாக கிடைத்தது. நேற்றைய நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகளில் பக்தர்கள் காத்திருந்தனர். இவர்கள் சுமார் 30 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் நேரடியாக சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: