×

ஐஎம்எப்பை சமாதானப்படுத்த எரிபொருள் விலையை மீண்டும் உயர்த்திய பாகிஸ்தான்: பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.22 அதிகரிப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் அதிரச்சி அடைந்துள்ளனர். கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் பாகிஸ்தான் நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் கேட்டுள்ளது.  மின்சாரம் உள்ளிட்ட எரிபொருள்கள் மீது கடுமையான வரி விதித்தால் மட்டுமே கடன் தர முடியும் என்று சர்வதேச நாணய நிதி்யம் தெரிவித்தது.

இதையடுத்து, கடந்த 15 நாட்களுக்கு முன் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.35 அதிகரித்து பாகிஸ்தான் அரசு அறிவித்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 22 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில், ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.272க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.280க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதுமட்டுமின்றி மண் ணெண்ணெய் விலையும் லிட்டருக்கு ரூ.12.90 அதிகரித்து பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் ரூ.202.73 காசுகளுக்கு விற்பனையாகிறது.


Tags : Pakistan ,IMF , Pakistan hikes fuel prices again to appease IMF: Rs 22 per liter hike in petrol, diesel
× RELATED பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்...