மூணாறு: கேரள மாநிலம் மூணாறு அருகே பள்ளிவாசல் குறிசுமலை முதல் லட்சுமி வரையிலான பகுதியில் கடந்த 2 நாட்களாக காட்டுத் தீ பரவி வருகிறது. இதில் ஏக்கர் கணக்கில் புல்வெளிகளும், சிறு மரங்களும் எரிந்து நாசமானது. வனவிலங்குகள் அதிகம் உள்ள பகுதி என்பதால் தேயிலை தோட்டங்கள் மற்றும் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு தீ பரவாமல் இருக்க வனப்பகுதியை சுற்றி வனத்துறையினர் தீயணைப்பு பெல்ட்டுகளை தயார் செய்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஆனாலும் இந்த மலைப்பகுதிகளில் ஆங்காங்கே சில பகுதிகளில் காட்டு தீ எரிந்து கொண்டு தான் இருப்பதால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
