×

கலைஞரின் காலடிபட்ட சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் முன்பு செல்பி எடுத்த முதல்வர்

சென்னை: சேலத்தில் கலைஞரின் காலடிபட்ட மாடர்ன் தியேட்டர்ஸ்  முகப்பின் முன் நின்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று  மாலை செல்பி  எடுத்துக் கொண்டார். சேலத்தில்  ‘களஆய்வில் முதலமைச்சர்’  நிகழ்வில் பங்கேற்க வந்த தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின், நேற்று  அஸ்தம்பட்டியில் உள்ள ஆய்வு மளிகையில் தங்கினார்.சேலம்-ஏற்காடு சாலையில் பயணித்தார். திடீரென்று  முகப்பை மட்டுமே தற்போது  முகவரியாக கொண்டுள்ள மாடர்ன் தியேட்டர்ஸ் முன்பு  இறங்கி நின்று செல்பி  எடுத்து மகிழ்ந்தார். முதல்வராக இருந்த போதும்  எளிமையோடு நின்று, தனது  தந்தை கலைஞரின் நினைவுகளால் அவர் செல்பி எடுத்த  நிகழ்வை மக்கள் வரவேற்றனர்.

சென்னையில்  தற்போது மையம் கொண்டு, ஆஸ்கார் வரை ஆழப்பாய்ந்து வரும் தமிழ்சினிமாவின்  தாய்மடியாக ஒரு காலத்தில் இருந்தது சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ். திருச்செங்கோடு ராமசுந்தரம் என்னும் டி.ஆர்.சுந்தரத்தால் 1935ம் ஆண்டு  சேலம்-ஏற்காடு சாலையில் நிறுவப்பட்டது  மாடர்ன் தியேட்டர்ஸ். மாடர்ன் தியேட்டர்சில் பணியாற்றிய கலைஞர் கருணாநிதி, புரட்சி  நடிகர் எம்ஜிஆர், வி.என்.ஜானகி என்று 3 பேர், தமிழக முதல்வர்களாகவும்  பொறுப்பு வகித்து மக்களின் மனங்களில் நீக்கமற நிறைந்துள்ளனர். இதில்  கலைஞருக்கும், மாடர்ன் தியேட்டருக்கும், மாங்கனி மணக்கும் சேலம்  மண்ணுக்கும் உள்ள பந்தம், காலத்தால் அழியாத கல்வெட்டு போன்றது. அந்த  நினைவுகளில் நெகிழ்ந்துதான், ேநற்று சேலம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்  செல்பி எடுத்து மகிழ்ந்தார்.


Tags : Salem Modern Theatres , Artist, Trampled, Salem Modern Theatre, Selfie, Principal
× RELATED சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவு...