×

காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் மாயம்

குளித்தலை: காவிரி ஆற்றில் குளிக்க இறங்கிய மாணவிகள் 4 பேரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர் குளித்தலை அருகே மாயனூர் கதவணையை சுற்றி பார்க்க வந்த பள்ளி மாணவிகள் 4 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் அரசு பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். நீரில் மூழ்கிய மாணவி ஒருவரை காப்பாற்ற முயன்றபோது ஒருவர் பின் ஒருவராக தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். தொட்டியத்தில் உள்ள கல்லூரியில் நடந்த கால்பந்து போட்டியில் பங்கேற்ற பிறகு மாயனூர் கதவணைக்கு வந்தபோது விபரீதம் ஏற்பட்டுள்ளது.


Tags : Cauvery river , 4 girl students drowned in Cauvery river
× RELATED 10 மாவட்டங்களில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்