×

மோடி அரசின் கொடூரத் தன்மையை மக்கள் நாள் தோறும் அனுபவிக்கிறார்கள் : ப.சிதம்பரம் அட்டாக்

சென்னை : ஒன்றிய அரசு வரிக்கொள்ளையின் மூலமாக பல லட்சம் கோடி ரூபாய்களை நடுத்தர ஏழை மக்களிடம் இருந்து நாள்தோறும் உறிஞ்சுகிறது என்று முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப. சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்டு வரும் பெட்ரோல் டீசல் விலை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் விமர்சித்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘உலக கிரிக்கெட்  இறுதிப் போட்டியில் யாரும் சதம் அடிக்கவில்லை என்ற குறையைப் பெட்ரோல் விலை நீக்கிவிட்டது! தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ100 ஐத் தாண்டியதுகச்சா எண்ணை விலை பீப்பாய்க்கு டாலர் 75 என்று இருக்கும் போது ஏன் இந்த நிலை?ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு காலத்தில் கச்சா எண்ணை விலை 105 டாலரைத் தாண்டியது, ஆனாலும் பெட்ரோல் விலை ரூ 65 ஐத் தாண்டவில்லை! இன்றைய நிலைக்கு ஒரே காரணம் மத்திய அரசின் வரிக் கொள்கை அல்ல, வரிக் கொள்ளை! இந்த வரிக் கொள்ளையின் மூலமாக மத்திய அரசு பல லட்சம் கோடி ரூபாய்களை நடுத்தர, ஏழை மக்களிடமிருந்து நாள் தோறும் உறிஞ்சுகிறது. திரு மோடி அரசின் கொடூரத் தன்மையை மக்கள் நாள் தோறும் அனுபவிக்கிறார்கள்,’ என்று தெரிவித்துள்ளார்.  …

The post மோடி அரசின் கொடூரத் தன்மையை மக்கள் நாள் தோறும் அனுபவிக்கிறார்கள் : ப.சிதம்பரம் அட்டாக் appeared first on Dinakaran.

Tags : Modi government ,P. Chitambaram Attak ,Chennai ,Union Government ,p. Sidambaram Attak ,
× RELATED தோல்வி பயத்தில் பாஜகவும் மோடியும்: ப.சிதம்பரம் விமர்சனம்