வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் சுகப்பிரசவம்: காஷ்மீர் டாக்டர் அசத்தல்

ஸ்ரீநகர்: காஷ்மீரில் குப்வாரா மாவட்டம் கெரன் பகுதியில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி ஒருவர் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் அவருக்கு பிரசவத்தில் சிக்கல் ஏற்பட்டதால் கிரால்போரா மாவட்ட துணை மருத்துவனைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் பனிப்பொழிவு காரணமாக சாலை வழியாகவோ, ஹெலிகாப்டர் மூலமோ அழைத்து செல்ல முடியவில்லை. இதனால் செய்வதறியாது திகைத்த ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள், இதுகுறித்து கிரால்போரா மகப்பேறு டாக்டர் பர்வைசுக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர் வாட்ஸ்அப் ‘வீடியோ கால்’ மூலம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் அர்சாத் சோபிக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கினார். அதன்படி, கர்ப்பிணிக்கு சுகபிரசவத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும், சேயும் நலமாக இருப்பதாக ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: