×

பாரா ஆசிய விளையாட்டு; ஆடவர் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு தங்கம்: புதிய சாதனையுடன் சுமித் ஆன்டில் அசத்தல்


ஹாங்சோ: 4வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி தொடர் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் ஆடவர் எப்64 பிரிவில் இந்தியாவின் சுமித் ஆன்டில் 73.29 மீட்டர் தூரம் வீசிய புதிய சாதனையுடன் தங்கம் வென்றார். இதற்கு முன் அவர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாரிஸில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப்பில் 70.83 மீட்டர் தூரம் வீசிய இருந்த நிலையில் அதனை தகர்த்தார்.
மற்றொரு இந்திய வீரர் புஷ்பேந்திரா 62.06 மீட்டர் தூரத்தை எறிந்து வெண்கல பதக்கம் கைப்பற்றினார்.

இலங்கையின் ஆராச்சிகே சமிதா 64.09 மீட்டர் எறிந்து வெள்ளிப்பதக்கத்தை வென்றார். மற்றொரு இந்திய வீரர் சந்தீப், 4வது இடத்தைப் பிடித்தார். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த 4பேரை தவிர, மற்ற எவரும் 50 மீட்டர் தூரம் கூட எட்டவில்லை. பதக்க பட்டியலில் இந்தியா மொத்தம் 10 தங்கம், 12 வெள்ளி,16வெண்கலம் என மொத்தம் 38 பதக்கங்களுடன் 5வது இடத்தில் உள்ளது.

The post பாரா ஆசிய விளையாட்டு; ஆடவர் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு தங்கம்: புதிய சாதனையுடன் சுமித் ஆன்டில் அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Para Asian Games ,Sumit Antil ,Hangzhou ,Asian Para Games ,Hangzhou, China ,Sumit Antil Astal ,
× RELATED ‘பாரா’ ஆசிய விளையாட்டில் அசத்திய தமிழக வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு