×

பெட்ரோல், டீசல் விலை உயர்வின் எதிரொலி: எரிபொருள் நிரப்ப கன்னியாகுமரிக்கு வரும் கேரள வாகன ஓட்டிகள்

கன்னியாகுமரி: கேரளாவை விட தமிழ்நாட்டில் பெட்ரோல் டீசல் விலை ரூ.4 குறைவாக உள்ளதால் அம்மாநில வாகன ஓட்டிகள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். கேரளாவில் அன்மையில் தாக்கல் செய்யப்பட்ட மாநில பட்ஜெட் முறையில் பெட்ரோல், டீசல் மீது ரூ.2 செஸ் வரி விதிக்கப்பட்டது. இதனால் கேரளாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.98 காசுகளுக்கும் ஒரு லிட்டர் டீசல் 96.77காசுகளுக்கும் விற்பனையானது. கன்னியாகுமரியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.50 காசுகளுக்கும் டீசல் ரூ.95.46 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கேரளாவின் எல்லை ஓரம் உள்ள வாகன ஓட்டிகள் களியக்காவிளையில் உள்ள டீசல் பங்க்-க்கு படையெடுக்கின்றனர். கேரளாவில் இன்னும் சில நாட்களில் பெட்ரோல், டீசல் விலை இன்னும் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திருவனந்தபுரம் எல்லையில் உள்ள வாகன ஓட்டிகள் கன்னியாகுமரி செல்வர் என்று தெரிகின்றது. கன்னியாகுமரியை நோக்கி வாகன ஓட்டிகள் நகர்வதால் எல்லையில் உள்ள கேரள பெட்ரோல் பங்க்-குகளில் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது.


Tags : Kerala ,Kannyakumari , Petrol-Diesel Price, Kanyakumari, Kerala Motorists
× RELATED நீட் தேர்வுக்கு எதிராக கேரளாவில் போராட்டம்..!!