×

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 150 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான் அணி!

கேப்டவுன்: மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 149 ரன்கள் எடுத்தது. 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.

இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய முனீபா அலி 12 ரன்களிலும், ஜவேரியா கான் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

நிதா தர் ரன் எதுவும் எடுக்காமலும், சித்ரா அமீன் 11 ரன்களிலும் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர்.
சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்த போதிலும் பிஸ்மா மரூஃப் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 68 ரன்கள் எடுத்தார். இவருடன் சேர்ந்து ஆயிஷா நசீம் 43 ரன்கள் எடுத்தார்.

20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 149 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ராதா யாதவ் 2 விக்கெட்டுகளை, தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ரகர் தலா 1 விக்கெட் எடுத்தனர். 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.

Tags : Women's T20 World World Cup Cricket ,Pakistan ,Indian , Women's T20 World Cup Cricket: Pakistan set a target of 150 runs to win the match against India!
× RELATED கரூர் நெரிசல் வழக்கு: 19ம் தேதி விஜயிடம் மீண்டும் விசாரணை?