திருச்சி: திருச்சியில் வெவ்வேறு பகுதியில் பள்ளி மாணவி, மூதாட்டி உள்பட 4 பேர் மாயமானதாக சம்மந்தப்பட்ட காவல்நிலையங்களில் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி இ.பி.ரோடு அண்ணாநகரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் சாவித்திரி 14. அப்பகுதியிலுள்ள பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவி வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து அவரது தந்தை கிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து மாணவியை தேடி வருகின்றனர். திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜான்அகஸ்டின் 53. மனைவியை பிரிந்து வாழும் இவர் கடந்த 5 ம்தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து அவரது சகோதரர் கொடுத்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்கு பதிந்து மாயமான ஜான் அகஸ்டினை தேடி வருகின்றனர். மூதாட்டி மாயம்: திருச்சி மேலகல்கண்டார்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன் மனைவி நெசிந்தா 72. இவர் நடைபயிற்சி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து புகாரின் அடிப்படையில் பொன்மலை போலீசார் வழக்கு பதிந்து நெசிந்தாவை தேடி வருகின்றனர். திருச்சி அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் அகஸ்டின் ஆரோக்கியராஜ் 50. திருமணம் ஆகி இரண்டு மகன்கள் உள்ளனர். மனைவியுடன் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழும் அகஸ்டின் ஆரோக்கியராஜ் ஏர்போர்ட் பகுதியிலுள்ள சகோதரி வீட்டில் இருந்து கடைக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதுக்குறித்து அவரது தாய் கொடுத்த புகாரின் பேரில் ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
