×

ஈரோடு இடைத்தேர்தல் முடிவில் தேமுதிகவின் பலம் தெரியும்: பிரேமலதா பேட்டி

திருச்சி: திருச்சியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா இன்று காலை அளித்த பேட்டி: தேமுதிக சுயமாக உருவாக்கப்பட்ட கட்சி. எங்கள் கட்சி இப்போது எந்த கூட்டணியிலும் இல்லை. ஈரோடு கிழக்கு தொகுதி ஏற்கனவே நாங்கள் வென்ற தொகுதி. அங்கு எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவு வரும்போது தேமுதிகவின் பலம் என்னவென்பது தெரியவரும். தேமுதிகவை விஜயகாந்த் மட்டும் தான் இயக்கி வருகிறார். நாடாளுமன்ற தேர்தல் வரும்போது யாருடன் கூட்டணி என்பதை அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Deemuka ,Erode ,Premalatha , Demuthika's strength will be visible at the end of Erode by-elections: Premalatha interview
× RELATED எடப்பாடி சூழ்ச்சியில் சிக்கி தவிப்பு;...