×

திருத்தணி கோயில் உண்டியல் வசூல் ரூ.90.76 லட்சம்

சென்னை: திருத்தணி முருகன் கோயிலில் கடந்த மாதம் கடைசி வாரத்தில் தைக்கிருத்திகை மற்றும் இம்மாதம், 5ம் தேதி தைப்பூசம் ஆகிய முக்கிய திருவிழாக்கள் நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து மூலவரை தரிசித்தனர். அப்போது பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை ரொக்கம், தங்கம், வெள்ளி போன்றவை உண்டியலில் காணிக்கையாக செலுத்தினர்.

அந்த வகையில் கடந்த, 27 நாட்களில் பக்தர்கள் உண்டியலில் செலுத்தி காணிக்கையை கோயில் தக்கார் ஜெய்பிரியா, துணை ஆணையர் விஜயா ஆகியோர் முன்னிலையில் கோயில் ஊழியர்கள் உண்டியல் திறந்து நேற்று எண்ணினர். இதில், 90 லட்சத்து, 76 ஆயிரத்தி, 417 ரூபாய் (ரூ.90,76,417) ரொக்கம், 528 கிராம் தங்கம், 5 கிலோ, 382 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன.

Tags : Tiruthani , Tiruthani Temple, bill collection, Rs.90.76 lakhs
× RELATED திருத்தணி அருகே பேருந்தில் சீட்...