×

திமுக வழக்கறிஞர் அணி நேர்காணலுக்கு இணையதளத்தில் விண்ணப்பப் படிவம்: செயலாளர் என்.ஆர்.இளங்கோ அறிவிப்பு

சென்னை: திமுக சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி. நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திமுக வழக்கறிஞர் அணியின் நேர்காணல் விண்ணப்பத்தை www.dmklegalwing.in B என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பத்தில் உள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, கையொப்பமிட்டு வருகிற 25ம் தேதிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தலைமைக் கழகத்திலோ அல்லது மாவட்ட திமுக அலுவலகத்திலோ விண்ணப்பதாரே நேரில் சென்று வழங்க வேண்டும். நேர்காணலுக்கான தேதி, இடம், நேரம் பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்பங்களை www.dmklegalwing.in Bல் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

Tags : N. R.R. Ilango , Online Application Form for DMK Advocate Team Interview: Secretary NR Ilango Notification
× RELATED எடப்பாடி சூழ்ச்சியில் சிக்கி தவிப்பு;...