தாய்லாந்தில் கராத்தே போட்டி: வெண்கலப்பதக்கம் வென்று அசத்திய மானாமதுரை வீரர்

மானாமதுரை: தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற கராத்தே போட்டியில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த மாணவர் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினார். மானாமதுரை ரயில்வே காலனி பகுதியை சேர்ந்தவர் சிவநாகார்ஜூன். இவர் மானாமதுரையில் கராத்தே பயிற்சியாளராக உள்ளார். கடந்த பிப்.4ம் தேதி தாய்லாந்து நாட்டில் உள்ள தேசிய விளையாட்டு பல்கலைக்கழகத்தில் 3வது மாஸ்டர்ஸ் ஓபன் கராத்தே சாம்பியன் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் கராத்தே மாஸ்டர் சிவநாகார்ஜூன் 40 வயது முதல் 44 வயதிற்குட்பட்ட கத்தா பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். வெண்கலப்பதக்கம் வென்று அசத்திய வீரரை மானாமதுரை பகுதி மக்கள் பாராட்டினர்.

Related Stories: