×

மகளிர் ஆசிய கோப்பை டி20 22 ரன் வித்தியாசத்தில் மலேசியாவை வீழ்த்தியது தாய்லாந்து

தம்புல்லா: மகளிர் ஆசிய கோப்பை டி20 தொடரின் பி பிரிவு லீக் ஆட்டத்தில், தாய்லாந்து அணி 22 ரன் வித்தியாசத்தில் மலேசியாவை வீழ்த்தியது.ராங்கிரி தம்புல்லா சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த தாய்லாந்து 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 133 ரன் குவித்தது. நன்னாபட் கொஞ்சரோயன்கை அதிகபட்சமாக 40 ரன் (35 பந்து, 6 பவுண்டரி) விளாசினார். மாயா 29, நாட்டய பூச்சதம் 18 ரன் எடுத்தனர். சுவனன் கியாடோ 14 ரன், ரோஸ்னன் கனோ 13 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

மலேசியா பந்துவீச்சில் மஹிரா இஸ்மாயில் 3 விக்கெட், சுவாபிகா மணிவண்ணன், அய்சியா எலீசா, வின்பிரெட் துரைசிங்கம் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய மலேசியா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 111 ரன் மட்டுமே எடுத்து 22 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. தொடக்க வீராங்கனைகள் கேப்டன் வில்பிரெட் துரைசிங்கம் 22 ரன், வான் ஜூலியா 52 ரன் (53 பந்து, 6 பவுண்டரி) விளாச, மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர் (3 பேர் டக் அவுட்). அய்னா நஜ்வா 6 ரன், தனு முகுனன் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தாய்லாந்து பந்துவீச்சில் ஒன்னிசா கம்சோம்பு 2, சனிதா சுத்திருவாங், நாட்டய பூச்சதம், திபட்சா புத்தவாங், சுலீபார்ன் லவோமி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். நன்னாபட் ஆட்ட நாயகி விருது பெற்றார். தாய்லாந்து அணி 2 புள்ளிகளை தட்டிச் சென்றது.

The post மகளிர் ஆசிய கோப்பை டி20 22 ரன் வித்தியாசத்தில் மலேசியாவை வீழ்த்தியது தாய்லாந்து appeared first on Dinakaran.

Tags : Thailand ,Malaysia ,Women's Asian Cup T20 ,TAMBULLA ,B DIVISION ,WOMEN'S ASIAN CUP T20 SERIES ,Rangri Tampulla International Stadium, Thailand ,Dinakaran ,
× RELATED போலி முகவர்களை நம்பி வெளிநாட்டிற்கு...