×

எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற இரண்டாம் நிலை காவலர்கள் 3,552 பேருக்கு ராஜரத்தினம் மைதானத்தில் உடல் தகுதி தேர்வு: முதல் நாளில் 350 பேர் பங்கேற்பு

சென்னை: இரண்டாம் நிலை காவலர்களுக்கான ேதர்வில் வெற்றி பெற்ற, 3,552 பேருக்கான உடல் தகுதி தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாளில் 350 பேர் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 3,271 இரண்டாம் நிலை காவலர், 161 சிறை காவலர்கள், 120 தீயணைப்பு வீரர்கள் என மொத்தம் 3,552 பணியிடங்கள் தேர்வு மூலம் நிரப்பப்படும் என்று தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்தது. இந்த தேர்வுக்கு  3,66,727 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

 தமிழகம் முழுவதும் 2,99,820 பேர் இந்த தேர்வை எழுதினர். சென்னையில் 16,178 ஆண்கள், 2,852 பெண்கள், 9 திருநங்கைகள் இந்த தேர்வை எழுதினர். எழுத்து தேர்வுக்கான முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதில், வெற்றி பெற்ற நபர்களுக்கு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் உடல் தகுதி தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று மாவட்ட வாரியாக நடந்தது. அதன்படி நேற்று காலை 3,552 இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடல் தகுதி தேர்வு நடந்தது.

சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் உடல் தகுதி தேர்வு நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதற்கட்டமாக சென்னை மண்டலத்தில் எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற 350 நபர்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது. அதன்படி அவர்களுக்கு ஓட்டப்பந்தயம், மார்பளவு, உயரம் மற்றும் சான்று சரிபார்ப்பு நடந்தது. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம், கயிறு ஏறுதல் போன்ற போட்டிகள் நடைபெறும்.



Tags : Rajaratnam ,Ground , Constable II, 3,552, physical fitness test, 350 on first day, participation
× RELATED ஜங்ஷன் நுழைவாயிலில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்