×

துபாய் விமானத்தில் தங்கம் கடத்தல் வாலிபர் கைது

சென்னை: துபாயிலிருந்து துபாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று அதிகாலை வந்தது. அதில் நடத்திய சோதனையில் சென்னையை சேர்ந்த 28 வயது ஆண் பயணியின் உள்ளாடைக்குள் 2 பார்சல்கள் இருந்தது, அதில்ஒரு கிலோ 110 கிராம் தங்கப்பசை இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.57 லட்சம். சுங்க அதிகாரிகள் சென்னை பயணியை கைது செயது தங்கப் பசையை பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் தீவிரமாக விசாரிக்கின்றனர்.


Tags : Dubai , Dubai, flight, gold smuggling, teenager arrested
× RELATED சென்னை- துபாய் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்