×

மதுரவாயல் - துறைமுகம் இடையே ரூ.5, 800 கோடியில் ஈரடுக்கு மேம்பாலம் அமைக்க ஒப்புதல்: சுற்றுச்சூழல் நிபுணர் குழு வழங்கியது

சென்னை: ரூ.5,800 கோடியில் 20.565 கி.மீ. நீளத்தில் கட்டப்பட உள்ள மதுரவாயல்-துறைமுகம் வரையிலான ஈரடுக்கு பாலம் அமைப்பதற்கு ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் குழு ஒப்புதல் வழங்கி உள்ளது. சென்னை -மதுரவாயல் துறைமுகம் இடையே 5 ஆயிரம் கோடியில் ஈரடுக்கு மேம்பாலம் உலக தரத்தில் கட்டப்படுகிறது. இந்த பறக்கும் விரைவுச்சாலை திட்டத்துக்கு, கடந்த 2010ம் ஆண்டில் திமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது. அதிமுக ஆட்சியில் 2010ம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்ட திட்டம் சுற்றுச்சூழல் விதிகளை காரணம் காட்டி, தமிழ்நாட்டு அரசால் 2012ல் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு 2018ல் மீண்டும் பறக்கும் சாலை திட்டப்பணிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியபோது அன்றைய மதிப்பீட்டில் படி ரூ.1,815 கோடி நான்கு வழிச்சாலையாக பறக்கும் சாலை தொடங்க திட்டமிடப்பட்டது. கூடுதல் நிதி மற்றும் செயல் திட்டங்களின் மூலம் மறுப்படியும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ரூ.3,100 கோடியில் இருந்து தற்போது திட்ட மதிப்பீடு ரூ.5,800 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போதைய திமுக அரசு பதவியேற்றதும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், 2022ம் ஆண்டு மே மாதம் கையெழுத்தானது. தமிழ்நாடு அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை துறைமுக கழகம், இந்திய கடற்படை இடையே இத்திட்டத்துக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, சென்னை துறைமுகம்  முதல் மதுரவாயல் வரையிலான ஈரடுக்கு மேம்பாலம் திட்டத்துக்கு கடலோர மண்டல மேலாண்மை அனுமதி வழங்க, ஒன்றிய அரசின் நிபுணர் மதிப்பீட்டு குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிலையில் சென்னை மதுரவாயல் - துறைமுகம் ஈரடுக்கு பாலம் அமைப்பதற்கு ஒன்றிய சுற்றுச்சூழல் நிபுணர் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.  

இப்பாலம் ரூ.5,800 கோடி செலவில் நான்று பகுதிகளாக கட்டப்பட உள்ளது. மதுரவாயல் சிவானந்தா சாலையிலிருந்து கோயம்பேடு வரை 20.565 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்தப் பாலம் கட்டப்படும். இந்த பாலத்தின் கீழ் அடுக்கில் உள்ளூர் வாகனங்களும், மேல் அடுக்கில் துறைமுகத்திற்கு செல்லும் வாகனங்களும் செல்லும் வகையில் இந்த பாலம் உருவாக உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில், ஒன்றிய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியும் மதுரவாயல் - துறைமுகம் ஈரடுக்கு உயர்மட்ட பாலம் அமைக்கும் திட்டம் 2024ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உயர்மட்ட பாலம் அமைக்க நிபந்தனைகளுடன் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேம்பாலம் தூண்களால் மழை மற்றும் சாதாரண காலங்களில் நீரோட்டத்திற்கு தடை ஏற்படக் கூடாது என்றும் பாலம் அமைக்க தற்காலிகமாக அமைக்கப்படும் கட்டமைப்பு பணிகள் முடிந்த ஒரு மாத்திற்குள் அகற்றப்பட வேண்டும். கட்டுமானத்தின் போது அகற்றப்படும் கழிவுகளை நீர்நிலைகயிலோ அல்லது அதற்கு அருகிலோ கொட்ட கூடாது என்றும் நிபந்தனை விதித்து இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கி ஒன்றிய அரசுக்கு சுற்றுச்சூழல் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு விரைவில்  முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது. சுற்றுசூழல் நிபுணர் குழுவின் நிபந்தனைகளுடன் விரைவில் பணியை தொடங்கி அடுத்த 30 மாதங்களுக்குள் பணியை முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

Tags : Maduravayal-Harbour ,Environment Expert Committee , Approval for construction of Rs 5, 800 crore flyover between Maduravayal-Harbour to Erud: Environment Expert Committee
× RELATED தமிழகத்தில் 31,500 கோடி மதிப்பிலான 11 திட்டத்தை தொடங்கி வைத்தார் மோடி