×

மசூதி குண்டுவெடிப்பில் 100 பேர் பலி: இந்தியாவில் கூட இப்படி நடப்பதில்லை! பாகிஸ்தான் அமைச்சர் வேதனை

இஸ்லாமாபாத்: இந்தியா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் கூட  தொழுகையின் போது முஸ்லீம்கள் கொல்லப்படுவதில்லை என்று பாகிஸ்தான் அமைச்சர் வேதனையுடன் கூறினார். பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள மசூதிக்குள் நேற்று முன்தினம் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிப் கூறுகையில், ‘இந்தியா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் கூட  தொழுகையின் போது முஸ்லீம்கள் கொல்லப்படுவதில்லை;

ஆனால் பாகிஸ்தானில் நடக்கிறது. நாட்டை ஒழுங்கமைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. மசூதிக்குள் தற்கொலை குண்டுவெடிப்பு நடத்திய ஜுஹ்ர், தொழுகையின் போது முன்வரிசையில் நின்றிருந்தான். இந்த கோர சம்பவம் நடந்த இடத்திற்கு பிரதமரும், ராணுவத் தளபதியும் நேரில் சென்று பார்வையிட்டனர். அதிகம் பேசவிரும்பவில்லை. ஆனால் பயங்கரவாதத்திற்கு விதைகளை நாம் விதைத்தோம் என்பதை என்னால் கூறமுடியும்’ என்றார்.

Tags : India ,Pakistan ,Minister ,Angam , 100 killed in mosque blast: This never happens even in India! Pakistan Minister Angam
× RELATED அனைத்திலும் சந்தேகத்துக்குரிய...