ஆந்திர முதல்வர் ஜெகன் விமானத்தில் கோளாறு

அமராவதி: ஆந்திர முதல்வர் ஜெகனை ஏற்றிக்கொண்டு டெல்லி சென்ற விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் திரும்பி வந்தது. விசாகப்பட்டினத்தில் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டின் ஆயத்த கூட்டத்தில் பங்கேற்க ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்டோர் நேற்று கன்னாவரம் விமானநிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டனர். அப்போது விமானத்தின் ஏசி வால்வில் ஏற்பட்ட கசிவு காரணமாக அழுத்தம் குறைவதை விமானி கவனித்தார். இந்த சிக்கலை கண்டறிந்த விமானி விமானத்தை மீண்டும் கன்னாவரம் விமான நிலையத்திற்கு திருப்பினார். இதனால் விமானம் நேற்று மாலை 5.03 மணிக்கு புறப்பட்டு 5.27 மணிக்கு மீண்டும் தரையிறங்கியது. இதையடுத்து முதல்வர் ஜெகன் இன்று  டெல்லி செல்வதற்கான மாற்று ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

Related Stories: