×

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, உடல்நல குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்  நல்லகண்ணுக்கு 97 வயதாகிறது. இவர் கடந்த சில நாட்களாக இருமல், காய்ச்சல் உள்ளிட்ட உடல்நல பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்றுள்ளார்.

இதனையடுத்து மருத்துவர்கள் நல்லகண்ணுவைப் பரிசோதித்து பார்த்துள்ளனர். அதில் அவருக்கு நுரையீரல் தொற்று பாதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில், நல்லக்கண்ணு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து நல்லக்கண்ணுக்கு காய்ச்சல் மற்றும் சளிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே நல்லக்கண்ணுவின் உடல்நிலை சீராக இருப்பதாக ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் கூறியுள்ளார். அவரது உடல்நிலை குறித்து அவர் கூறியதாவது; நல்லகண்ணுவின் உடல்நிலை சீராக உள்ளது, பொதுப்பிரிவு மருத்துவர்கள், நுரையீரல் துறை மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். தொடர்ந்து மருத்துவக் குழுவினர் அவரது உடல் நிலையைக் கண்காணித்து வருகின்றனர் எனவும் கூறியுள்ளார்.


Tags : Communist Party of India ,Nallannu Hospital , Senior Communist Party of India leader Nallakannu admitted to hospital
× RELATED யானைகள் வழித்தட வரைவு அறிக்கையை...