×

பழனி மலைக் கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு: எல்.இ.டி. திரை மூலம் குடமுழுக்கு நிகழ்ச்சி ஒளிப்பரப்பு

திண்டுக்கல்: 16 ஆண்டுகளுக்கு பிறகு பழனி மலைக் கோயிலில் இன்று குடமுழுக்கு நடைபெறுவதை ஒட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோயிலில்
நடைபெறும் குடமுழுக்கை காண பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். பழனி மலைக் கோயிலில் நடைபெறும் குடமுழுக்கு விழாவை எல்.இ.டி. திரை மூலம் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடிவாரத்தில் உள்ள கிரிவலப்பாதை உட்பட 3 இடங்களில் எல்.இ.டி. திரை மூலம் குடமுழுக்கு நிகழ்ச்சி ஒளிப்பரப்பு செய்யப்பட உள்ளது. குடமுழுக்கின்போது பழனி மலைக் கோயில் மீது ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags : Palani mountain temple ,L. E. TD , Kudamuzkuku at Palani Hill Temple after 16 years: L.E.T. Kudamukku show telecast through screen
× RELATED பழநி மலைக்கோயில் வின்ச்சில்...