×

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இரவு நேரங்களில் மக்களை வாட்டி வதைக்கும் குளிர்

நெல்லை: நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இரவு நேரங்களில் குளிர்காற்றோடு பொதுமக்களை பனி வாட்டி வதைக்கிறது. இரு தினங்களாக மழை பெய்த நிலையில், நேற்று மீண்டும் வெயில் தலைக்காட்டியது. நெல்ைல, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெப்பம் நிலவிய நிலையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இரு தினங்கள் மழை பெய்தது.

நேற்று முன்தினம் ஓரளவுக்கு நெல்லை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழைப்பொழிவு அதிகமாக காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இரவு நேரங்களில் கடும் குளிரும் ெபாதுமக்களை வாட்டி வதைத்தது. நெல்லை, தென்காசியில் தொடர்ச்சியாக இரவு நேரங்களில் காணப்படும் குளிரால் பொதுமக்கள் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். இரவு 7 மணிக்கு தொடங்கும் வாடைக்காற்றானது, காலை 7 மணி வரை நீடிக்கிறது.  இந்நிலையில் நேற்று மிதமான வெயில் தென்பட்டது.

நேற்று காலை 7 மணி நேர நிலவரப்படி நெல்லை மாவட்டத்தில் 225 மிமீ மழை பெய்திருந்தது. அதன்படி அம்பையில் 14 மிமீ, சேரன்மகாதேவியில் 8.20 மிமீ, மணிமுத்தாறு 8.20. நாங்குநேரி 1, பாளை 11.20 மிமீ, பாபநாசம் 17, ராதாபுரம் 15, நெல்லை 11, சேர்வலாறு 6, கன்னடியன் அணைக்கட்டு 7.60. களக்காடு 3.60, மூலைக்கரைப்பட்டி 10 மிமீ மழை, அடர்ந்த வனப்பகுதிகளான மாஞ்சோலையில் 30 மிமீ, காக்காச்சியில் 33 மிமீ, நாலுமுக்கில் 19, ஊத்து பகுதியில் 30 மிமீ மழை பெய்திருந்தது.

தென்காசி மாவட்டத்திலும் ஓரளவுக்கு மழை காணப்பட்டது. ஆய்குடியில் 8.50 மிமீ, சங்கரன்கோவில் 1.50 மிமீ, செங்கோட்டையில் 4 மிமீ, சிவகிரியில் 2 மிமீ, ராமநதியில் 17 மிமீ, அடவிநயினார் பகுதியில் 2மிமீ, தென்காசி 10, கடனா 20, குண்டாறு 3.40 மிமீ மழை பெய்துள்ளது. குற்றால அருவிகளில் வெள்ளம் குறைந்ததால் நேற்று மீண்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அணைகளின் நீர்மட்டத்தை பொறுத்தவரை பெரிய அளவில் மாற்றமில்லை. வரும் 27ம் தேதி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில், நேற்று மழை மீண்டும் மாயமானது.

Tags : Nellai ,Thoothukudi ,Tenkasi , Nellie, Thoothukudi, Tenkasi, the cold is withering the people
× RELATED நெல்லையில் பிரதமர் மோடி இன்று பரப்புரை