ஜி20 மாநாடு எதிரொலி மாமல்லபுரம் கடற்கரை கோயில் நடைபாதை சீரமைப்பு

சென்னை:  ஜி20 மாநாடு எதிரொலியாக, மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் நடைபாதை சீரமைப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. வரும் 31 மற்றும் பிப்ரவரி 2 ஆகிய இரு தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு சென்னையில் நடக்க உள்ளது. இதற்காக, 20 நாட்டு பிரதிநிதிகள் வரும் ஜனவரி 30ம் தேதி சென்னை வருகின்றனர். மேலும், ஜி20 பிரதிநிதிகள் அடுத்த மாதம் பிப்ரவரி 1ம்தேதி மாலை 4.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை மாமல்லபுரம் புராதன சின்னங்களை பார்வையிடுகின்றனர்.

இதற்கான, வெளிநாட்டு பிரதிநிதிகளை வரவேற்க புல்தரை அமைப்பது, புராதன சின்னங்களை கெமிக்கல் மூலம் தூய்மை படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை தொல்லியல்துறை நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். அந்த வகையில், மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் சேதமடைந்த நடைபாதைகளை சிமென்ட் கலவைகள் மூலம் சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: