×

கட்டுக்குள் வந்தது கொரோனா பரவல்: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 89 பேருக்கு பாதிப்பு உறுதி.! ஒன்றிய சுகாதாரத்துறை அறிவிப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. அந்த வகையில் தொற்று பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 89 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 1,931 ஆக உள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 82 ஆயிரத்து 104- ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 737 ஆக அதிகரித்துள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 0.06- சதவிகிதமாகவும் வாராந்திர பாதிப்பு விகிதம் 0.08 சதவிகிதமாக உள்ளது. கொரோனா மீட்பு விகிதம் 98.81 சதவிகிதமாக உள்ளது. நாட்டில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்னிக்கை 220.30 கோடியாக உள்ளது.

Tags : India ,Union Health Department , Corona spread under control: 89 people infected in last 24 hours in India. Union Health Department Notification
× RELATED ஊர்க்காவல் படைக்காக தேர்வான 50...