எங்கள் சின்னத்தை முடக்கியதுபோல் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும்: தேர்தல் ஆணையருக்கு சிவசேனா கடிதம்

திருப்பூர்: அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என தேர்தல் ஆணையருக்கு சிவசேனா கட்சி கடிதம் எழுதியுள்ளது. சிவசேனா கட்சியின் இளைஞரணி மாநில தலைவர் திருமுருக தினேஷ், இந்திய தலைமை தேர்தல்  ஆணையருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் வெவ்வேறு அணியாக உள்ளனர். இரு அணிகள் பிரச்னையில் அதிமுக கட்சி அலுவலகத்தில்கூட தாக்குதல்  சம்பவம் நடைபெற்றது. இது அனைவரும் அறிந்ததே. ஏற்கனவே சிவசேனா கட்சியின் ஏகாத் சிண்டே, உத்தவ் தாக்கரே பிரச்னையின்போது சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டது. அதே நிலைப்பாட்டை தற்போது கணக்கில் கொண்டு இந்திய தேர்தல் ஆணையம் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தையும் முடக்க வேண்டும். இந்திய தேர்தல் ஆணையம் நாட்டின் அனைத்து கட்சிகளுக்கும் சமமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். ஆளும் ஒன்றிய அரசுக்கு சாதகமான கட்சிகளுக்கு இலகுவான நடவடிக்கையை கடைபிடிக்கக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: