தமிழ்நாடு என்று குறிப்பிடுவது அரசுக்கு கிடைத்த வெற்றி: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி

புதுக்கோட்டை: நீட் விலக்கு தொடர்பாக ஒன்றிய அரசிடமிருந்து மீண்டும் விளக்கம் கேட்டு கடிதம் வந்துள்ளது. அதை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பரிசீலித்து உரிய விளக்கங்களை தயார் செய்து தருவார். பின்னர் சட்டத்துறை ஒப்புதல் தரும். அதன்பிறகு மக்கள் நல்வாழ்வுத்துறை, அதன் விளக்கத்தை ஒன்றிய அரசுக்கு அனுப்பும். இதுகுறித்து ஒரு வாரத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விளக்கம் தருவதாக தெரிவித்துள்ளார்.

தன்னார்வலர்கள், ஆசிரியர்களை கொண்டு சிறுவர் சீர்திருத்த பள்ளிகளில் இருக்கக்கூடிய சிறுவர், சிறுமியர்கள் திருந்தி வாழ்வதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. சிவகங்கையில் சட்டக்கல்லூரி அமைந்துள்ளதால் உடனடியாக புதுக்கோட்டை மாவட்டத்துக்கு சட்ட கல்லூரி வருவதற்கான வாய்ப்பில்லை. ஆனால் வரக்கூடிய அறிக்கையில் பிற மாவட்டங்களுக்கு சட்ட கல்லூரிகளை முதல்வர் அறிவிப்பார்.

ஒன்றிய அமைச்சர், கவர்னரால் தமிழ்நாடு என்று குறிப்பிடப்பட்டு வருகிறது.

இது தமிழ்நாடு அரசு எடுத்த முயற்சிக்கும், மக்களின் உணர்வுக்கும் கிடைத்துள்ள வெற்றி. தமிழ்நாட்டில் எப்போதும் தமிழ் மொழி உணர்வு, இன உணர்வு, நாடு உணர்வு மங்கி போய் விடுவதில்லை என்பதற்கு இது ஒரு உதாரணம். எல்லா பக்கத்தில் இருந்தும் எதிர்ப்பலைகள் தோன்றியதன் விளைவாக தற்போது தமிழ்நாடு என்ற பெயர் எல்லோரும் பாராட்டப்பட கூடிய அளவுக்கு ஒன்றிய அரசாலும், கவர்னராலும் சொல்லப்பட்டு வருகிறது என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

Related Stories: