×

விக்கிரவாண்டி தேர்தல் வெற்றி மிகப்பெரிய எழுச்சியை முதலமைச்சருக்கு தந்துள்ளது : சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி

புதுக்கோட்டை : விக்கிரவாண்டி தேர்தல் வெற்றி மிகப்பெரிய எழுச்சியை முதலமைச்சருக்கு தந்துள்ளது என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் உள்ள அரசு பள்ளியில் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி,” மாயாவதியோ, ஆம்ஸ்ட்ராங்கோ எங்களுக்கு தோழமை தான். வேண்டாதவர்கள் அல்ல. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளைத் தான் போலீஸார் பிடித்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங் வழக்கில் வீடியோ ஆதாரத்தை வெளியிட்டுள்ளோம் போலீஸ் பிடியில் இருந்து தப்பியோடும் போது குற்றவாளிகளை சுட்டுத்தான் பிடிக்க வேண்டியுள்ளது. அவசியமின்றி சுட வேண்டிய அவசியமில்லை.திமுகவினர் மீது சிலர் குற்றம் சுமத்துகின்றனர். அதனையும் விசாரிக்க நாங்கள் தயாராகத்தான் இருக்கிறோம்.

விக்கிரவாண்டி தேர்தலில் நாங்களும் பணம் தரவில்லை, எதிர்க்கட்சியினரும் பணம் தரவில்லை. தேர்தலில் மக்கள் வாக்களித்தனர்; அதிமுகவின் வாக்குகள் எங்களுக்குதான் கிடைத்துள்ளது. இதனை எப்படி தங்களுக்கு கிடைத்த வெற்றி என்று பா.ம.க. கூறுகிறது. விக்கிரவாண்டியில் அதிமுக வாக்குகள் தங்களுக்கு விழும் என்று பாமக நினைத்தது ஆனால் கிடைக்கவில்லை. விக்கிரவாண்டி தேர்தல் வெற்றி மிகப்பெரிய எழுச்சியை முதலமைச்சருக்கு தந்துள்ளது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போன்ற வெற்றியை விக்கிரவாண்டி மக்கள் தந்திருக்கிறார்கள்,” இவ்வாறு தெரிவித்தார்.

 

The post விக்கிரவாண்டி தேர்தல் வெற்றி மிகப்பெரிய எழுச்சியை முதலமைச்சருக்கு தந்துள்ளது : சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Vikravandi ,Chief Minister ,Law Minister ,Raghupathi Petty ,Pudukottai ,Tamil Nadu ,Raghupathi ,Vikravandi election ,Tamil ,Nadu ,
× RELATED விக்கிரவாண்டியில் 23ம் தேதி நடைபெற...