×

இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக்கிற்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

லண்டன்: காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதால் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்  புதிய திட்டங்கள் குறித்து  விளம்பரப்படுத்துவதற்காக காரில் பயணித்தபடி வீடியோ மூலம் பேசினார். அந்த வீடியோவில் ரிஷி சுனக்,  ‘சீட் பெல்ட்’ அணியாமல் பயணித்தபடி பேசும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இது வைரலாக பரவியதுடன், பிரதமரே சீட் பெல்ட் அணியாமல் காரில் சென்றது குறித்து பலரும் விமர்சித்திருந்தனர். சீட் பெல்ட் அணியாமல் சென்றதற்காக ரிஷி சுனக் மன்னிப்பும் கோரினார். ஆனாலும் சீட் பெல்ட் அணியாமல் காரில் பயணித்ததற்காக ரிஷி சுனக்கிற்கு ரூ.10 ஆயிரம்(100 பவுண்டுகள்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Tags : Rishi Sunak , British Prime Minister Rishi Sunak fined Rs.10 thousand
× RELATED இத்தாலியில் ஜி 7 உச்சி மாநாடு போப்...