×

8.62% மாநில வளர்ச்சி கடன் 2023 தொடர்பான கடன் பத்திரம் ஒப்படைக்க தமிழ்நாடு அரசு கெடு

சென்னை: வங்கிக் கணக்கில் உரிய விவரங்கள் இல்லாத,  மின்னணு மூலம் நிதிகளை வரவு வைப்பதற்கு உரிய நாளில் தொகையை திருப்பிச் செலுத்துவதற்கு 8.62% தமிழ்நாடு  மாநில வளர்ச்சி கடன் 2023 தொடர்பான கடன் பத்திரங்களை வைத்திருப்பவர்கள்,  அவர்களுடைய கடன் பத்திரங்களை, 20 நாட்களுக்கு முன்னதாகவே, பொதுக் கடன்  அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கை:

தமிழ்நாடு அரசு, நிதித்துறையின் 2013ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி அறிவிக்கையின் வரையறைகளின்படி வழங்கப்பட்ட 8.62% தமிழ்நாடு மாநில வளர்ச்சி கடன், 2023  நிலுவைத் தொகையானது, 2023 பிப்ரவரி 20ம் தேதி 2023 பிப்ரவரி 19ம் தேதி உட்பட்ட உரிய நாளது வரையிலான வட்டித் தொகையுடன் திருப்பிச் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்படுகிறது. 20.2.2023ம் நாளிலிருந்தும் அதற்கு பின்னரும் இக்கடனுக்கு வட்டித் தொகை சேராது.

கடன் பத்திரங்களை பொறுத்தமட்டில், தொகை செலுத்தும் நோக்கத்திற்காக, நேர்விற்கேற்ப அசல் சந்தாதாரர் அல்லது இத்தகைய அரசு கடன் பத்திரங்களை வைத்திருப்பவர் வட்டித்தொகை செலுத்துவதற்காக முகப்பிடப்பட்டுள்ள, பதிவு செய்யப்பட்டுள்ள வங்கிக்கு அல்லது கருவூலத்திற்கு மற்றும் சார் கருவூலத்திற்கு அல்லது பாரத ஸ்டேட் வங்கியின் கிளைக்கு  நேர்விற்கேற்ப அவர்களுடைய வங்கிக் கணக்கின் உரிய விவரங்களை அளிக்க வேண்டும்.

வங்கிக் கணக்கில் உரிய விவரங்கள் இல்லாத, மின்னணு மூலம் நிதிகளை வரவு வைப்பதற்கு ஆணை பிறப்பிக்கப்படாத நேர்வில், உரிய நாளில் தொகையை திருப்பிச் செலுத்துவதற்கு ஏதுவாக, 8.62% தமிழ்நாடு மாநில வளர்ச்சி கடன் 2023 தொடர்பான கடன் பத்திரங்களை வைத்திருப்பவர்கள், அவர்களுடைய கடன் பத்திரங்களை, 20 நாட்களுக்கு முன்னதாகவே, பொதுக் கடன் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

Tags : Government of Tamil Nadu , 8.62% State Development Loan 2023 Government of Tamil Nadu to hand over debenture
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...